Breaking News

6/recent/ticker-posts

குஜராத்தை 89 ரன்னில் சுருட்டி ஊதி தள்ளிய டெல்லி

 

ஐ.பி.எல்.கிரிக்கெட்டில் இன்று குஜராத்-டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி  பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் 8 ரன்னில் அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து சகா 2 ரன், சாய் சுதர்ஷன் 12 ரன், மில்லர் 2 ரன், ரஷித்கான் 31 ரன், திவேதியா 10 ரன் ஷாருக்கான் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட்டானார்கள். இதனால் குஜராத் அணி 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ரன்னில் சுருண்டது. இது குஜராத் அணி ஐ.பி.எல். தொடரில் எடுத்த குறைந்த பட்ச ரன் ஆகும்.

முகேஷ்குமார் 3 விக்கெட்டும், ஸ்டப்ஸ், இஷாந்த்சர்மா தலா 2 விக்கெட்டும், கலீல் அகமது, அக் ஷர் பட்டேல் தலா ஒருவிக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 89 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி டெல்லி அணி களம்இறங்கியது. ரன் ரேட்டை உயர்த்தும் விதமாக அந்த அணி ஆரம்பம்முதலே அதிரடியாக விளையாட தொடங்கியது. இதனால் பிரதிவ்ஷா 7 ரன், மெக்கர்க் 20 ரன், அபிஷேக்போரல் 15 ரன், ஷாய்ஹோப் 19ரன் எடுத்து அவுட்டானார்கள். முடிவில் டெல்லி அணி 8.5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 92ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரிஷப்பண்ட் 16 என்னும், சுமித் குமார் 9 ரன்னும் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தனர். 

குஜராத் அணியில் சந்தீப் வாரியார் 2 விக்கெட்டும், ரஷித்கான், ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோர் தலா ஒரு  விக்கெட்டும் வீழ்த்தினார்கள். குஜராத் அணியை டெல்லி எளிதாக ஊதி தள்ளி அபார வெற்றி பெற்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்