Breaking News

6/recent/ticker-posts

வயநாட்டையும் ராகுல் கைவிடுவார்-பிரதமர் மோடி தாக்கு

மகாராஷ்டிராவின் நாந்தேட்டில் பா.ஜனதா பேரணியில்  பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசியதாவது:-

கேரளாவின் வயநாட்டில்   ராகுல் காந்திக்கு ஆதரவைப் பெறுவது கடினம்.

அவர் ஏப்ரல் 26 -ந் தேதி வாக்குப்பதிவுக்குப் பிறகு அந்த இடத்தை விட்டு  ஓடிவிடுவார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பூர்வீக தொகுதியான அமேதியை விட்டு வெளியேறியது போல் வயநாடு பாராளுமன்ற தொகுதியை விட்டு வெளியேறி விடுவார். 

காங்கிரஸ் கட்சி தனக்கு பாதுகாப்பான மற்றொரு இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அமேதியில் இருந்து ஓட வேண்டிய நிலை வந்தது போல, வயநாட்டையும் விடவேண்டிய நிலை ஏற்படும்.

 வயநாட்டில் வாக்குப்பதிவு முடிந்த பிறகு, காங்கிரஸ் தனது இளவரசருக்கு பாதுகாப்பான இடத்தைத் தேடும் என்று நான் நம்புகிறேன்.  இந்தியா கூட்டணியின் உறுப்பினர்கள் 25 சதவீத தொகுதிகளுக்காக தற்போது போராடி வருகிறார்கள். இந்தியா கூட்டணியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் ‌ காங்கிரஸ் வேரோ நிலமோ இல்லாத கொடி. அதை ஆதரிப்பவரையும் அது உறிஞ்சி எடுக்கும்.

மகாராஷ்டிராவை வளர்ச்சியடைய காங்கிரஸ் அனுமதிக்கவில்லை. ஜம்மு காஷ்மீர் பிரச்சனைகளுக்கு காங்கிரஸ் தான் காரணம்.

 இவ்வாறு மோடி பேசினார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்