மேற்கு வங்கத்தில் ஒரு கள்ளக்காதல் ஜோடியை நடுரோட்டில் கொடூரமாக ஒருவர் மூங்கில் குச்சி துடிக்க துடிக்க தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்தவீடியோ மேற்கு வங்க மாநிலம் உத்தர் தினாஜ்பூர் மாவட்டம் சோப்ரா எனும் பகுதியில் எடுக்கப்பட்டு உள்ளது.
தாக்குதல்
வீடியோவில் சாலையில் இளம்பெண்ணும், ஆணும் அமர்ந்துள்ளனர். அவர்களை சுற்றி ஏராளமான பொதுமக்கள் நிற்கின்றனர். அவர்கள் இருவர் மீதும் வாலிபர் ஒருவர் கம்பால் கொடூரமாக தாக்குதல் நடத்துகிறார்.
முதலில் பெண் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. மூங்கில் குச்சியால்அந்த நபர் பெண்ணை ஈவு ஈரக்கமின்றி கொடூரமாக தாக்குகிறார். வலி தாங்க முடியாத அந்த பெண் சாலையில் உருண்டு அலறி துடிக்கிறார். அதேபோல் சாலையில் அமர்ந்திருந்த ஆண் மீதும் அந்த நபர் மூங்கில் குச்சியால் விளாசுகிறார். அவரும் வலி தாங்க முடியாமல் துடிக்கிறார்.
வேகமாக பரவி வருகிறது
ஆனால் அவர்களை சுற்றி நின்ற பொதுமக்கள் யாரும் இதனை தடுக்கவில்லை. அனைவரும் வேடிக்கை பார்க்கிறார்கள்.இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.கள்ளக்காதல் ஜோடி மீது தான் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த ஜோடி மீது தாக்குதல் நடத்தும் நபர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்று தெரிகிறது.
பா.ஜனதா இந்துக்களின் பிரதிநிதி இல்லை- ராகுல்காந்தி
0 கருத்துகள்