Breaking News

6/recent/ticker-posts

பா.ஜனதா இந்துக்களின் பிரதிநிதி இல்லை- ராகுல்காந்தி

பாராளுமன்றத்தில் இன்று(1&ந்தேதி)குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம்நடந்தது.. அப்போது மணிபூர் கலவரம், நீட் வினாத்தாள் கசிவு, இந்து விவகாரம், வெறுப்புணர்வு பேச்சு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ராகுல் காந்தி அனல் கக்கியபடி பேசினார். இதனால் பாராளுமன்றத்தில் இன்று கூட்டத்தில் கடும் கூச்சல் மற்றும் கடும் விவாதம் நடந்தது. 

சிவபெருமான்

இதேபோல் அரசியல் சாசனத்தின் நகல் மற்றும் சிவபெருமான், முகமது நபி மற்றும் குருநானக் சிங் பல்வேறு படங்களை லோக்சபாவில் காட்டியபடி ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார். பா.ஜ.க. மற்றும் ஆர்எஸ்எஸ் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
ராகுல் காந்தியின் அனல் பறந்த பேச்சின் சாராம்சம் வருமாறு:-
பா.ஜனதா, பிரதமர்மோடி, ஆர்எஸ்எஸ் இந்துக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதிகள் இல்லை.இந்து மதம் என்பது பயம், வெறுப்பு, பொய்களைப் பரப்பும் மதம் இல்லை.(அப்போது பிரதமர் மோடியே எழுந்து ராகுல் காந்தி பேச்சைக் குறுக்கிட்டார். ராகுல் காந்தியின் பேச்சு இந்துக்கள் மீதான தாக்குதல். இந்துக்களை வன்முறையாளர்களாகக் காட்ட ராகுல் முயல்கிறார்.

 நீங்கள் இந்துக்களே இல்லை

ஒட்டு மொத்த இந்து சமுதாயத்தின் மீதான தாக்குதல் என்றார்.) குறிப்பாகச் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையில் பாஜக ஈடுபடுகிறார்கள். நமது சமூகத்தில் இருந்த பெரிய மனிதர்கள் அகிம்சையைப் பற்றிப் பேசினார்கள்.. ஆனால் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் வெறுப்பைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். நீங்கள் இந்துக்களே இல்லை
கடவுளுடன் நேரடி தொடர்பும், கடவுளிடம் நேரடியாக பேசும் பிரதமர் மோடி, காந்தி இறந்துவிட்டதாகவும், ஆவணப் படம் மூலமே காந்தியை உலகம் அறிந்ததாகவும் கூறுகிறார். அறியாமையை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? காந்தி இறக்கவில்லை. அவருடன் உயிருடன் இருக்கிறார்.
ஒரு மதம் மட்டுமே தைரியத்தை கூறவில்லை. அனைத்து மதங்களும் தைரியத்தைப் பற்றி பேசுகின்றன. இஸ்லாம், சீக்கியம் என அனைத்து மதங்களும் தைரியத்தை வலியுறுத்துகின்றன. உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. அயோத்தியிலேயே மக்கள் பாடம் புகட்டி இருக்கிறார்கள்.
அக்னிவீரர் திட்டம் ராணுவத்துக்கான திட்டமல்ல; மோடிக்கான திட்டம். அக்னிவீரர் திட்ட வீரர்களின் உயிரிழப்பை வீர மரணங்களாக பாஜக அரசு ஏற்குமா?.


மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா? 

மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா? அங்கு ஏன் பிரதமர் மோடி செல்லவில்லை. பிரதமர் மோடியையும், அமித் ஷாவையும் பொறுத்தவரை மணிப்பூர் ஒரு மாநிலமே இல்லை. ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு அயோத்தி மக்களுக்கு அழைப்பு இல்லை. அம்பானி மற்றும் அதானிக்கே அழைப்பு விடுக்கப்பட்டது.
அயோத்தி மேம்பாட்டு திட்டத்துக்காக அங்குள்ள ஏராளமான மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது. ஆனால் அதற்கான இழப்பீடு வழங்கப்படவில்லை. நீட் தேர்வு வியாபார ரீதியாக நடத்தப்படுகிறது. பணக்காக்காரர்களின் குழந்தைகளுக்காகவே நீட் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த 7 ஆண்டுகளில் 70 முறை வினாத்தாள் கசிவு நிகழ்வுகள் நடந்துள்ளன. பணம் இருந்தால் தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.
கடந்த 10 ஆண்டுகளில் எதிர்க்கட்சி தலைவருக்கு பிரதமர் மோடி எழுந்து பதில் சொல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்களது.
இதேபோல் மத்திய மந்திரி அமித் ஷா ராஜ்நாத்சிங்கும் பதில் அளித்தனர்.

நீட் வினாத்தாள் கசிவில் குஜராத் பள்ளி உரிமையாளர் கைது

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்