Breaking News

6/recent/ticker-posts

அகமதாபாத்-வதோதரா விரைவு சாலையில் லாரி மீது கார் மோதி 10 பேர் பலி

குஜராத் மாநிலம் வதோதராவில் இருந்து அகமதாபாத் நோக்கி விரைவுச்சாலையி இன்று மாலை கார் ஒன்று சென்று கொண்டு இருந்தது. கேதா மாவட்டம் நதியாத் அருகே எக்ஸ்பிரஸ் சாலையோரம் பழுது காரணமாக லாரி ஒன்றை டிரைவர் நிறுத்தி வைத்து இருந்தார்.
அதிவேகமாக வந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்பக்கத்தில் பயங்கர வேகத்தில் மோதியது.

இந்த விபத்தில் காரில் இருந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 2 பேர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார்கள்.
இவர்களில் 5 வயது குழந்தை மற்றும் கார் டிரைவர் அடங்குவர். நிறுத்தப்பட்டு இருந்த லாரி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து ஜம்மு நோக்கி சென்று கொண்டிருந்ததாக தெரிகிறது. விபத்தில் பலியானவர்கள் அனைவரும்
 குஜராத்தின் வதோதரா, நதியாத் மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அவர்கள் மொத்தமாக பயணம் செய்த போது விபத்தில் சிக்கி பலியாகி இருக்கிறார்கள். பலியானவர்களில் 4 பேர் மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்