Breaking News

6/recent/ticker-posts

மாலை 6 மணிவரை அனைவரும் வாக்களிக்க ஏற்பாடு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு பேட்டி

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு நிருபர்களிடம் இன்று கூறியதாவது:-

நாளை பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 1.58 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 10.92 லட்சம் பேர் முதல் முறை வாக்காளர்கள் ஆவர். 3.32 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள். 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.இதில் 874 பேர் ஆண்கள். 76 பேர் பெண்கள் ஆவர். நாளை மாலை 6 மணி வரை வரிசையில் நிற்கும் கடைசி நபர் வரை வாக்களிக்க அனுமதி வழங்கப்படும். 39 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்குப்பதிவு முடிந்த பிறகு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் ஸ்டார்ங் அறையில் 50 கம்பெனி ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

நேற்று வரை ரூ.173 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 8050 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை. 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானவை. வாக்களார் அடையாள அட்டை இல்லாதவர்கள் 13 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்களிக்கலாம். 81,157 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 86,858 விவிபாட் எந்திரங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. வாக்குச்சாவடிகள் ஆன்லைன் மூலம் கண்காணிக்கப்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்