Breaking News

6/recent/ticker-posts

ஏழைப்பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை, நீட்தேர்வு மாநில அரசின் விருப்பம்-காங்கிரஸ் தேர்தல் அறிக்கை



பாராளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

அக்னிபாத் திட்டம் ஒழிக்கப்படும். நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். நாட்டில் உள்ள ஆறுகள் அனைத்தும் தூய்மை படுத்தப்படும். ஏழைப்பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கும் மகாலட்சுமி திட்டம். தேசிய கல்வி கொள்ைக திருத்தி அமைக்கப்படும்.இலங்கை தமிழர் பிரச்சினையில் அரசியல் தீர்வு காணப்படும். நீட், கியூட் நுழைவுத்தேர்வுகள் மாநில அரசின் விருப்பத்திற்கு உட்பட்டது. ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கான கட்டணசலுகை மீண்டும் வழங்கப்படும். உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு கல்விக்கடன் ரூ.7.5 லட்சம் வரை வழங்கப்படும். 2025-ம் ஆண்டுமுதல் மத்திய அரசு பணிகளில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும். 

பா.ஜ.க. கொண்டு வந்த ஜி.எஸ்.டி ரத்த செய்யப்பட்டு வணிகர்களுக்கு ஏற்ற ஜி.எஸ்.டி.2.0 கொண்டுவரப்படும். 100 நாள் வேலைத்திட்டம் ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும். திறமையான விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை. எம்.பி., எம்.எல்.ஏக்கள் கட்சி தாவினால் தானே பதவி இழக்கும் சட்ட  திருத்தம் கொண்டுவரப்படும். தேர்தல் நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்படும். காஷ்மீர் மற்றும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும். ஒரே நாடு, ஒரே தேர்தல் கொண்டுவரப்படாது. பா.ஜ.க.கொண்டு வந்த அனைத்து மக்கள் விரோத சட்டங்களிலும் திருத்தம் செய்யப்படும். இட ஒதுக்கீட்டுக்கான 50 சதவீத உச்சவரம்பை நீக்க அரசியல் சட்டத்தில் திருத்தம்.பொருளாதாரத்தில் நலிவடைந்த அனைத்து சமூகத்தினருக்கும் 10 சதவீத இடஒதுக்கீடு.மார்ச் 2024 வரை பெற்ற அனைத்து கல்விக்கடனும் ரத்து செய்யப்படும். ரூ.25 லட்சம் மதிப்புள் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும். அனைத்து விசாரணை அமைப்புகளும் பாராளுமன்றம் அல்லது சட்டமன்றங்களின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்.



நிதிஅயோக் திட்டக்குழு மீண்டும் கொண்டுவரப்படும். ஜனநாயக முறையில் நீர்ப்பங்கீடு செயல்படுத்தப்படும். 14 லட்சம் பேர் அங்கன் வாடி பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள். பணம் மதிப்பிழப்பு, ரபேல் ஒப்பந்தம், பெகாசஸ் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தப்படும். மாநில அரசுகள் விரும்பாவிட்டால் நீட், கியூட் நுழைவுத்தேர்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை. 12-ம் வகுப்பு வரை இலவச கல்வி. தேர்தல் பத்திர முறைகேடு, பி.எம்.கேர்ஸ், ராணுவ ஒப்பந்த ஊழல் குறித்து விசாரணை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்