Breaking News

6/recent/ticker-posts

டிரான்ஸ்பார்மர் குடோனில் பயங்கர தீவிபத்து பல கிலோ மீட்டர் உயரத்திற்கு கரும்புகை

 ராய்ப்பூர்,ஏப்.5-
சத்திஸ்கர் மாநிலம், ராய்ப்பூர், கோட்டா  பகுதியில் மின்வாரியத்துக்கு சொந்தமான  சுமார் ஒன்றரை ஏக்கர் நிலத்தில் டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்வினியோகத்திற்கு  தேவையான உபகரணங்கள் வைக்கும் கிடங்கு மற்றும் துணைமின் நிலையம் உள்ளது. 

இன்று மதியம் 2 மணியளவில் அந்த குடோனில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த டிரான்ஸ்பார்மர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. தீ மளமளவென காற்றின் வேகத்தில் கிடங்கு முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதுமே கரும்புகையாக காட்சி அளிக்கின்றன. பயங்கர குண்டு வெடிவெடிப்பு போன்று கரும்புகை வானில் பல கிலோ மீட்டர் உயரத்திற்கு எழுந்தது. தீயை அணைக்கும் பணியில் 10-க்கும்மேற்பட்ட வண்டிகளில் தீயணைப்பு வீர்கள் தொ£டர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

 


 சுமார் 4 மணிநேரத்திற்கு மேல் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. அந்த பகுதி முழுவதும் கரும்புகையாக காட்சி அளிக்கிறது. சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு கரும்புகை எழுவது தெரிவதால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. அந்த பகுதி முழுவதுமே மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.
தீயை கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கு காரணம் அங்குள்ள 25 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட எண்ணை கிடங்கிலும் தீ பற்றியதே காரணம் என்று கூறப்படுகிறது. டிரான்ஸ்பார்மரில் தீ பற்றி வெடித்த போது அதில் இருந்து பறந்து வந்த தீப்பொறி எண்ணை கிடங்கிலும் விழுந்து பற்றி உள்ளது. தீயை கட்டுப்படுத்த முடியாததால் அங்குள்ள சுற்றுச்சுவரை உடைத்து ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் சென்றன. அவர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தீ விபத்துக்கான காரணம் என்ன?மற்றும் சேதமதிப்பு எவ்வளவு என்று உடனடியாக தெரியவில்லை. 

கிடங்கில் சுமாரர் 6000  டிரான்ஸ்பார்கள் வைக்கப்பட்டு  இருந்ததாகவும், அதில்  1500 டிரான்ஸ்பார்கள்  எரிந்து சாம¢பலானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.சாம்பலானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போலீசார் கிடங்கு உள்ள சுமார் 3 கி.மீட்டர்  தூரத்திற்கு மக்களை வெளியேற்றி போக்குவரத்தையும் நிறுத்தி உள்ளனர். அதிர்ஷ்டவசமாக உயிர்பலி ஏற்படவில்லை.இதுபற்றி உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் தீ விபத்து நடந்த இடத்தில் முதல்அமைச்சரின்  செயலாளர் தயானந்த் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்