Breaking News

6/recent/ticker-posts

குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று குஜராத்-லக்னோ அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் ராகுல் 33 ரன்னிலும், டிக்காக் 6 ரன்னிலும், படிக்கல் 7 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

இதை தொடர்ந்து ஸ்டோனிஸ் களமிறங்கி அதிரடியாக ஆடினார். அவர் 43 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார். இதில் 2 சிக்சர்கள்,4 பவுண்டரிகள் அடங்கும். பின்னர் பூரான் 32 ரன்னும், பதோனி 20 ரன்களும்  எடுத்தனர்.முடிவில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களம் இறங்கியது. அதிரடி வீரர் சுப்மன்கில் 19 ரன்னில் யாஷ் தாகூர் பந்தில் போல்ட் ஆனார்.

சாய் சுதர்சன் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடி 31 ரன்கள் எடுத்தார். இதன் பின்னர் வந்த வீரர்கள் யாரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. வில்லியம்சன் ஒரு ரன்னும், சரத் 2 ரன்னும் ,விஜய் சங்கர் 17 ரன்னும் எடுத்தனர்.ரஷித் கான் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் குஜராத் அணியின் ரன் வேகம் குறைந்தது.


திவேதிதா கடைசி  கட்டத்தில் அதிரடியாக விளையாடி 30  ரன்கள் எடுத்து அவுட் ஆனார். முடிவில் குஜராத் அணி 18.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து130 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் லக்னோ அணி 33 ரன்கள்  வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
லக்னோ அணி பவுலர்  யாஷ் தாகூர் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.குர்ணால் பாண்ட்யா 3 விக்கெட்டும், நவீன் உல்ஹக் , பிஷ்னோய் தலா ஒரு விக்கெட்டும் எடுத்திருந்தனர்.
முன்னதாக மும்பை-டெல்லி அணிகள் மோதிய ஆட்டத்தில் மும்பை அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில்  5 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் விளையாடிய டெல்லி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்