Breaking News

6/recent/ticker-posts

பூம்பாறை நவ பாஷாண முருகர் சிலை பற்றி தெரியுமா?

பழனியில் மூலவராக உள்ள நவபாஷாண முருகனை அபிஷேகம் செய்து வரும் பிரசாத தீர்த்தத்தை சாப்பிட்டால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. இந்த நவபாஷாண முருகன் சிலையை உருவாக்கி பிரதிஷ்டை செய்தவர் மாமுனியான சித்தர் போகர்  ஆவார். இவர் உருவாக்கியது பழனி மலை முருகன் மட்டும் தான் என்று பெரும்பாலானவர்கள் அறிவர்

ஆனால் கொடைக்கானலில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பூம்பாறை முருகன் சிலையும் சித்தர் போகர்தான் நவபாஷானத்தால்உருவாக்கியவர் என்பது இப்போது உள்ள தலைமுறையினர் பலரும் அறியாதது.  அதுபோல் அருள் பாளிப்பதிலும் பழனி முருகன் போன்று அருள் தர வல்லவர் என்பது அந்த கோவிலுக்கு சென்று அனுபவ ரீதியாக பயன் அடைந்தவர்களுக்குத்தான் நன்கு தெரியும்.
 பூம்பாறையில் வீற்றிருக்கும் முருகன் நினைத்தால் தான் நாம் இங்கு வர முடியும். இந்த தேதியில், இந்த நேரத்தில் வரவேண்டும் என்பது அவனது விருப்பம். அந்த அளவுக்கு சக்திவாய்ந்த நவபாசான முருகனாக வேண்டிய வரங்களை அள்ளி வழங்கி வருகிறார். அருள் பாளிப்பதிலும் பழனி முருகன் போன்று அருள் தர வல்லவர் என்பது அந்த கோவிலுக்கு சென்று அனுபவ ரீதியாக பயன் அடைந்தவர்களுக்கு நன்கு தெரியும்.



சித்தர் போகர் பழனி மலைக்கும், பூம்பாறை மலைக்கும் நடுவில் உள்ள யானை முட்டி குகையில் அமர்ந்து, தான் கற்று வந்த கலைகளை சோதிக்க அதற்கான மூலிகைகள் ராசாயண பொருட்கள் சேகரித்து முதலில் ஒரு முருகன் சிலையை உருவாக்கினார்.
அந்த சிலையைத் தான் பழனி மலை மீது பிரதிஷ்டை செய்தார். தண்டம் கொண்டு அச்சிலையை உருவாக்கியதால் அதற்கு தண்டாயுதபாணி என்று பெயர் சூட்டினார்
பின்னர் மறுபடியும் சீனா நாட்டிற்கு சென்று பஞ்சபூத சக்திகளை மீண்டும் பெற்று யானை முட்டி குகைக்கு வந்து ஞான நிலையை அடையும் பிரம்மத்தை உணர்ந்து கொள்ளவும் ஆதிபராசக்தியின் துணைகொண்டு குருமூப்பு என்ற அருமருந்தை நிலைநிறுத்தவும் பஞ்சபூதங்களை நிலைப்படுத்தி அதன் மூலம் குருமூப்பு சிலையை உருவாக்கினார்.அந்த சிலைதான் பூம்பாறை மலை உச்சியில் உள்ளது. 


அருணகிரிநாதர் ஒருமுறை பூம்பாறை மலைக்கு முருகனை தரிசிக்க வந்தபோது இரவு நேரமானதால் கோவில் மண்டபத்தில் தங்கி தூங்கிவிட்டார். அப்போது ராட்சசி ஒருவள் அருணகிரிநாதரை கொல்ல வந்தார். அவரை காக்க முருகன் குழந்தை வடிவம் கொண்டு காவியுடை அணிந்திருந்த அருணகிரி நாதர் மீது ஏறி விளையாடினார். இதனால் குழந்தையும் தாயும்தான் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணி அந்த ராட்சசி அருணகிரிநாதரைக் கொல்லாமல் சென்று விட்டதாம்.


இதனை தனது ஞான திருஷ்டியால் நடந்த சம்பவத்தை கண்டு குழந்தை வேடம் வந்து தன் உயிரை காப்பாற்றியதால் குழந்தை வேலர் என்று அழைக்கப்பட்டு குழந்தை வேலப்பராக இன்றும் முருகன் பூம்பாறையில் அருள்பாளித்து வருகிறார். அவரின் பக்கத்திலேயலே அருணகிரிநாதருக்கும் சிலையுடன் கோவில் உள்ளது.
தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு குழந்தை வடிவம் கொண்டு அருள்பாளித்து வருகிறார் குழந்தை வேலப்பர். நாமும் பூம்பாறை சென்று முருகனின் அருளை பெறுவோம்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்