விக்கிரவாண்டி தி.மு.க. எம்எல்ஏ புகழேந்தி நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலகம் இன்று அறிவித்து உள்ளது. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் கமிஷனர் சத்யபிரதா சாகு இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருப்பது தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனுக்கு தகவல் தெரிவிக்கப்படும். பாராளுமன்ற தேர்தலுடன் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது தெ ாடர்பாக தேர்தல் ஆணையம் முடிவு செ்யயும். ரெயிலில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி தொடர்பாக தேர்தல் சிறப்பு குழு விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இதில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி அறிக்கையினை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பும் அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும். முதல் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடந்தாலும் ஜுன் 4-ந்தேதி வைர பணம்கொண்டு செல்வதில் கட்டுப்பாடு தொடரும். தமிழகத்தில் இதுவரை 2.08 கோடி பூத்சிலிப் வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
0 கருத்துகள்