Breaking News

6/recent/ticker-posts

தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை பானை சின்னம் கேட்டு ஒன்றரை மாதங்கள் கழித்து வழங்க முடியாது என்றனர் திருமாவளவன் குற்றச்சாட்டு

திருச்சி,மார்ச்.30-

பாராளுமன்ற தேர்ததில் விடுதலை சிறுத்தைகள் கட்சி  தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி  தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியிலும், பொதுச் செயலாளர் ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இதுதவிர, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலங்கானா, மராட்டிய மாநிலங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது.எனவே, தேர்தலில் தங்களுக்கு பானை சின்னத்தை, பொதுவான சின்னமாக ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் வி.சி.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது. 

ஆனால் ஒரு சதவீதத்துக்கும் குறைவாக வாக்கு பெற்றதாகக் கூறி கோரிக்கையை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்தது.
இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வி.சி.க. வழக்கு தொடர்ந்து. இதையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு  பொது சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய முடிவு எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. எனவே விடுதலை சிறுத்தைகள்கட்சிக்கு நிச்சம் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் கட்சியினர் உள்ளனர். இது தொடர்பாக கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று கூறும்போது பானை சின்னம் கிடைக்கும் என்பதில் மிக உறுதியாய் நிற்கிறோம் என்று தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-
பா.ஜனதா நிரந்தரமாக ஆட்சியில் இருக்கும் என்ற எண்ணத்தில் தேர்தல் ஆணையம் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. பானை சின்னம் கேட்டு ஒன்றரை மாதங்கள் கழித்து தான் சின்னம் வழங்க முடியாது என்று தெரிவித்தார்கள்.
தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை.பா.ஜ.க. மற்றும் சங்பரிவார்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.எப்படி நேர்மையாக தேர்தலை நடத்துவார்கள் என்று தெரியவில்லை. அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாளை  டெல்லியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன்.சமூகநீதி மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது பா.ஜ.க.
இவ்வாறு அவர் கூறனார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்