பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் மொத்தம் 6 பேர் ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் போட்டியிடுகிறார்கள். இதனால் முன்னாள் முதல்அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலக்கம் அடைந்து உள்ளார். ராமநாதபுரம் தொகுததியில் தனது பலத்த காட்டப்போவதாக கிளம்பிய பன்னீர் செல்வத்துக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் இது புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஓ.பன்னீர் செல்வங்கள் போட்டியால் ராமநாதபுரம் தொகுதி அனைவரையும் கவனிக்க வைத்து உள்ளது.
இதற்கிடையே இன்று வேட்பாளர்கள் இறுதி பட்டியல் அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு ஒதுக்கபட்ட சின்னங்களை தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் ஓ. பன்னீர் செல்வத்துக்கு பலாப்பலம் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. முன்னதாக அவர் கேட்ட வாளி சின்னத்தை 4 பேர் கேட்டனர். இதனால் 4 பேரின் பெயர்கள் சீட்டில் எழுதி குலுக்கப்பட்டது.
இதில் திருமங்கலம் வாகை குளத்தை சேர்ந்த ஒச்சாத்தேவர் மகன் பன்னீர் செல்வம் பெயர் வந்தது. இதையடுத்து வாளி சின்னம் அவருக்கு ஒதுக்கப்பட்டது.
ஓ பன்னீர் செல்வத்துக்கு போட்டியாக அதே பெயரில் போட்டியிடும் மதுரை சோலை அழகுபுரத்தை சேர்ந்த ஒய்யாத்தேவர் மகன் பன்னீர் செல்வத்துக்கு திராட்சை சின்னம், மதுரை மாவட்டம் ஒய்யாரம் மகன் பன்னீர் செல்வத்துக்கு கண்ணாடி டம்ளர், ராமநாதபுரம் மாவட்டம் மலையாண்டி மகன் பன்னீர் செல்வத்துக்கு பட்டாணி சின்னம் ஒதுக்கப்பட்டது.
பெயர் குழப்பத்துக்கு இடையே தனது சின்னத்தை எப்படி பொதுமக்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கொண்டுசெல்லப்போகிறார்? தனது பலத்தை எப்படி காண்பிப்பார்? மக்கள் குழப்பம் அடையாமல் வாக்களிப்பார்களா? என்பது அனைவரையும் எதிர்பார்க்க வைத்து உள்ளது.
ஆனால் ஒ.பன்னீசெல்வம் தரப்பினர் அனைத்து சூழ்ச்சிகளையும் தகர்த்து எரிவோம் என்று கூறி தேர்தல் களத்தில் குதித்து உள்ளனர்.இதே போல் தி.மு.க.கூட்டணியில் உள்ள ம.தி.மு.க. திருச்சி தொகுதியில் போட்டியிடும் துரை வைகோ பம்பரம் சின்னம் கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்து இருந்தார். அவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. துரை வைகோவுக்கு தீப்பபெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டது. விடுதலை சிறுத்தை கட்சிக்கு பானை சின்னம் கிடைத்து உள்ளது. அவர் கேட்ட சின்னம் கிடைத்தால் தொண்டர்கள்உற்சாம் அடைந்து உள்ளனர். நாளை முதல் தேர்தல் களம், பிரசாரம் மேலும் சூடுபிடிக்கும்.
0 கருத்துகள்