Breaking News

6/recent/ticker-posts

ஜனாதிபதி திரவுபதி முர்மு பாரதரத்னா விருதுகளை வழங்கினார்

புதுடெல்லி,மார்ச்.30-
 மறைந்த முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சவுத்ரி சரண் சிங் மற்றும் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, பீஹார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்குர், தமிழகத்தை சேர்ந்த மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு ‘பாரத ரத்னா’ விருதுகளை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்து இருந்தது.
இந்தநிலையில், டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (30&ந்தேதி) நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பாரதரத்தான விருதுகளை வழங்கினார்.

எம்.எஸ்.சுவாமிநாதன் சார்பில் பாரத ரத்னா விருதை பெறும் அவரது மகள் டாக்டர். நித்யா ராவ்.

இதில் மறைந்த முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங், நரசிம்ம ராவ், பீஹார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்குர் ஆகியோர் சார்பில் அவர்களது குடும்பத்தினர் பாரத ரத்னா விருதுகளை பெற்றுக் கொண்டனர். எம்.எஸ்.சுவாமிநாதன் சார்பில் அவரது மகள் டாக்டர் நித்யாராவ் விருதை பெற்றார்.
வயது மூப்பு காரணமாக பாரதிய ஜனதா கட்சியின்  மூத்த தலைவர் அத்வானி ஜனாதிபதி மாளிகைக்கு வரவில்லை. இதனால் அவருக்கு வீடு தேடி சென்று பாரத ரத்னா விருதை கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. பாரதரத்னா விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள்  அமித்ஷா, , பா.ஜனதா தேசிய தலைவர் நட்டா,காங்கிரஸ் தலைவர் கார்கே  ஆகியோர் கலந்து கொண்டனர்.



 நரசிம்மராவ் சார்பில் அவரது மகன் பிரபாகர் ராவ் பாரத ரத்னா விருது பெற்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்