Breaking News

6/recent/ticker-posts

அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து தண்ணீரில் விழுந்தது பதைபதைக்கும் வீடியோ காட்சி

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள பால்டிமோர் பகுதி உள்ளது. இங்கு பிரான்சிஸ் ஸ்காட் கீ என்ற மிகப்பெரிய இரும்பு பாலம் 2.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே இருந்தது. இன்று அதிகாலை சிங்கப்பூரில் இருந்து இலங்கை நோக்கி புறப்பட்டு வந்த பெரிய சரக்கு கப்பல் ஒன்று அந்த பாலத்தின் அருகே சென்றது. அப்போது எதிர்பாராத விதமாகப் பாலத்தின் மீது மோதி சரக்கு கப்பல் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாலத்தின் ஒருபகுதி முற்றிலும் இடிந்து கீழே இருந்த படாப்ஸ்கோ நதிக்குள் விழுந்தன.
பாலம் இடிந்து விழுந்ததால் அதில் சென்று கொண்டு இருந்த ஏராளமான கார்கள் ஆற்றுக்குள் பாய்ந்து மூழ்கின. தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினர் ஆற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.மேலும் பாலத்தின் மீது மோதிய வேகத்தில் சரக்கு கப்பலும் தீப்பிடித்துஎரிந்தது. இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

 விபத்து காரணமாக அப்பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
விபத்து ஏற்படுவதற்கு முன்பு சரக்கு கப்பலின் புகை வெளியேறும் பகுதியில் இருந்து மிகவும் அதிக அளவில் கரும்புகை வெளியேறி உள்ளது. மேலும் பாலத்தின் மீது மோதுவதற்கு முன்பு சில நிமிடங்கள் கப்பலில் 2 முறை விளக்குள் எரியாமல் இருட்டாக இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து மேரிலேண்ட் கவர்னர் வெஸ் மூர் கூறும்போது, பாலம் இடிந்து விழுந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கப்பல் மோதியதற்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது. முதல் கட்ட விசாரணையில் இது விபத்து என்பது தெரியவந்து உள்ளது.பயங்கரவாத தாக்குதலுக்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்றார். இந்த பாலம் கடந்த 1977 ம் ஆண்டுதிறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே விபத்து ஏற்பட்ட சரக்கு கப்பலில் இருந்த மாலுமிகள் உள்பட அனைத்து பணியாளர்களும் இந்தியர்கள் என்று கூறப்படுகிறது.அவர்களது நிலைமை என்ன என்பது பற்றியும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
சரக்கு கப்பல் மோதியதில் பாலம் சுக்குநூறாக சில வினாடிகளில் இடிந்து விழும் காட்சிகள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 


கருத்துரையிடுக

0 கருத்துகள்