Breaking News

6/recent/ticker-posts

உஷ்... ஒரு மனுஷனுக்கு இவ்வளவு சோதனையா... ராமநாதபுரத்தில் 5 ஓ.பி.எஸ்.கள் போட்டி என்ன செய்ய போகிறார் ஒரிஜினல் ஓ.பி.எஸ்

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ந் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்வது கடந்த புதன்கிழமை தொடங்கியது.நேற்று முகூர்த்த நாள் என்பதால் திமுக, அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், பாமக, பாஜக, தேமுதிக, உள்ளிட்ட கட்சிகள் என 400- க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை. இதையடுத்து அவர் ராமநாத புரத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு தனது பலத்தை நிரூபிக்க போவதாக தெரிவித்து இருந்தார். இதனால் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள்தனது தலைவரின் பலத்தை எப்படியாவது காண்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் களத்தில் குதித்தனர்.
ஆனால் அவர்களது எண்ணத்திற்கு ஆப்பு வைக்கும் வகையில் புதிய சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
ஓ.பன்னீர் செல்வம் மனுத்தாக்கல் செய்த நேற்றைய தினமே உசிலம்பட்டி வட்டம் மேக்கிலார்பட்டியை சேர்ந்த ஓச்சப்பன் மகன் பன்னீர் செல்வம் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிலைமையை எப்படியும் சமாளித்து விடலாம் என்று நினைத்து இருந்த நேரத்தில் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் விதமாக ஓபிஎஸ் என்ற ஒரே பெயர் இனிஷியலுடன் இன்று மதுரையை சேர்ந்த மேலும் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
 இதனால் இப்போது ராமநாதபுரம் தொகுதியில் 5 ஓ.பி.எஸ்.கள் போட்டியிடும் நிலைமை உள்ளது. வேட்பு மனுதாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதால் இன்னும் எத்தனை ஓ.பி.எஸ்.கள் தேடி வந்து மனுத்தாக்கல் செய்ய உள்ளனரோ
என்ற கலக்கத்தில் அசல் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். இந்த பிரச்சினையை எப்படி சமாளிப்பதுஎன்று தெரியாமல் ஓ.பன்னீர் செல்வமும் அவரது ஆதரவாளர்களும் கையை பிசைந்து கொண்டு இருக்கிறார்கள்.

வேட்புமனு தாக்கல் செய்த அனைத்து ஓ.பி.எஸ்.களும் சுயேட்சை வேட்பாளர்கள் என்பதால் அவர்களுக்கான  சின்னங்கள் என்ன ஒதுக்கீடு செய்யப்படும் என்பது வேட்புமனு ஏற்கும் நாளன்றுதான் தெரியவரும்.இதனால் ஒ.பி.எஸ்.சும, அவரது ஆதரவாளர்களும் தங்களது சின்னத்தை எப்படி பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது என்ற குழப்பத்திலும் உள்ளனர்.
 ராமநாதபுரம் தேர்தல் களத்தில் தற்போது 5 ஓ.பி.எஸ்.கள் இருப்பதால் அந்த தொகுதியும் ஸ்டார் அந்தஸ்தை பெற்று உள்ளது.5 ஓ.பி.எஸ்.கள் போட்டியை நினைத்து பொதுமக்கள் சிரித்தாலும் ஒரு மனுஷனுக்கு இவ்வளவு சோதனை வரக்கூடாது என்று பரிதாபத்துடன் தெரிவித்தனர்.
இரட்டைஇலை சின்னம் தொடர்பான வழக்கில் இரட்டை இலை சின்னம், கொடி, கடிதம் பேடு பயன்படுத்த ஓ.பி.எஸ்.சுக்கு ஏற்கனவே உள்ள தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்து வழக்கு விசாரணையை ஜூன் மாதம் 10-ந்தேதிக்கு தள்ளி வைத்து விட்டது.

 இதனால் ஓ.பி.எஸ்.சின் கடைசி ஆயுதமும் ஒன்றும் இல்லாமல் நிற்கதியாய் நின்ற நேரத்தில் ராமநாதபுரத்தில் சுயேட்சையாக களத்தில் குதித்தார். இப்போது இதற்கும் ஆப்பு வைக்கும் வகையில் மேலும் 4 ஓ.பி.எஸ்.கள் உள்ளதால்   ஒரிஜினல் ஓ.பி.எஸ் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி உள்ளார். இதனை  ஓ.பி.எஸ். சமாளிப்பாரா...தனது பலத்தை நிரூபிப்பாரா... என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்