Breaking News

6/recent/ticker-posts

படுக்கையில் 500 ரூபாய் நோட்டு குவியலில் ஹாயாக தூங்கும் அரசியல் பிரமுகர்

பாராளுமன்ற தேர்தலில் அசாமில் பா.ஜனதாவுடன் அங்குள்ள  ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் கூட்டணி வைத்து உள்ளது. இந்த நிலையில் ஐக்கிய மக்கள் கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் படுக்கை மெத்தையில் 500 ரூபாய் நோட்டுகளில் ஹாயாக படுத்து இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படம் தற்போது சமுக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ரூபாய் நோட்டுகளில் சொகுசாக படுத்து இருப்பவர் ஐக்கிய மக்கள் கட்சி லிபரலின் முக்கிய  பிரமுகரான பெஞ்சமின் பாசுமாதாரி என்பது தெரியவந்து உள்ளது. அவர், உடல்குரி மாவட்டம் பைரகுரியில் விசிடிசி தலைவராக இருந்து உள்ளார்.
பெஞ்சமின் பாசுமாதாரி சட்டை அணியாத நிலையில் இடுப்பில் துண்டை மட்டும் கட்டியபடி 500 ரூபாய் நோட்டுகளின் மீது தூங்குகிறார். மேலும் அவரது உடல் மற்றும் நெற்றி மீதும் ரூபாய் நோட்டுகள் போடப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய மக்கள் கட்சி லிபரலின் தலைவர் பிரமோத் போரா கூறும்போது, பெஞ்சமின் பாசுமாதாரி கட்சியில் இல்லை. அவர் இந்த ஆண்டு ஜனவரி 10&ந் தேதி இடைநீக்கம் செய்யப்பட்டு விட்டார். அவர் மீது ஏற்கனவே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு விசிடிசி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் பாசுமாதிரியை யூ.பி.பி.எல். கட்சியுடன் இணைத்து கூறுவதை தவிர்க்க வேண்டும்.அவரது செயல்கள் அவரது சொந்தப் பொறுப்பு மட்டுமே. அவரது தனிப்பட்ட செயல்களுக்கு கட்சி பொறுப்பேற்காது என்று கூறினார்.

இதற்கிடையே 500 ரூபாய் நோட்டுகளில் ஹாயாக படுத்து இருந்த பெஞ்சமின் பாசுமாதாரி கூறும்போது இந்த புகைப்படம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பார்ட்டியில் நண்பர் ஒருவர் எடுத்தது என்று கூறிஉள்ளார். தற்போது இந்த புகைப்படம், வீடியோபால் அசாமில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.எதிர்கட்சிகள் பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சியான யூ.பி.பி.எல்.டியை வறுத்தெடுத்து வருகிறார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்