தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. ஆரம்பத்தில் குறைவாக இருந்த வேட்புமனுதாக்கதால் பின்னர் கடந்த 2 நாட்களில் அதிகரித்தது. வேட்பு மனு தாக்கலின் போது வடசென்னையில் தி.முக.&அ.தி.மு.க.வாக்குவாதம், ஊட்டியில் பா.ஜனதா தொண்டர்கள் மீது போலிஸ் தடியடி என்று பரபரப்பானது.
வேட்பு மனுத்தாக்கலுக்கு இன்று கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் போட்டி போட்டி மனுத்தாக்கல் செய்தனர். இதனால் வேட்புமனுக்கள் பெறும் அலுவலம் தேர்தல் களைகட்டி இருந்தது.
மொத்தம் 1741மனுக்கள் பெறப்பட்டுஉள்ள நிலையில் நாளை மனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது.
0 கருத்துகள்