Breaking News

6/recent/ticker-posts

மும்பைக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி சிக்ஸர் மழையால் 277 ரன்கள் குவித்து அபார வெற்றி

 


ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று மும்பை- ஐதராபாத் அணிகள் மோதின. ஐதராபாத்தில் உள்ள மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் விளையாடிய ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹெட் அதிரடியாக ஆடி மிரள வைத்தார். அவர் 24 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். மயங்க் அகர்வால்11 ரன்களுக்கு ஹார்த்திக் பாண்டியா பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்  ஆனார்.

இதன் பின்னர் அபிஷேக் ஷர்மா 23 பந்துகளில் 63 ரன்கள் வெளுத்து வாங்கினார். அவர் 7 சிக்சர்கள்,3  பவுண்டரிகள் அடித்தார்.மார்க்ரம் 28 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் கிளாசன் மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தார்.அவர் 34 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். இதில் 7 சிக்சர்கள்,4 பவுண்டரிகள் அடங்கும். இதையடுத்து ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 277 ரன்கள் குவித்தது.

இதைத்தொடர்ந்து 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற  இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடத் தொடங்கியது.தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன், ரோகித் சர்மா ஆகியோர் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினாலும் அவர்களால் நிலைத்து நின்று ஆட முடியவில்லை. 

ரோகித் சர்மா 12 பந்துகளில் 26 ரன்கள் ,இஷான் கிஷன்  13 பந்துகளில் 34 ரன்கள், நமன் திர் 14 பந்துகளில் 30 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் திலக் வர்மா அதிரடியாக ஆடி 34 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார்.இதில் 6 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் அடங்கும்.

ஐ.பி.எல்.லில் ரோகித் சர்மாவுக்கு 200-வது போட்டி.

ஹார்த்திக் பாண்டியாவால் அதிரடியாக ஆட முடியவில்லை.அவர்,20 பந்துகளில் 24 ரன்கள் மட்டுமே எடுத்தார்,டிம் டேவிட் கடைசி நேரத்தில் அதிரடி காட்டி 22 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். மும்பை அணியால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து ஐதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் மொத்தம் 523 ரன்கள் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ரன் என்பதையும் ஹைதராபாத் அணி பெற்றது. இந்த ஆட்டத்தில் மொத்தம் 38 சிக்சர்கள்,31 பவுண்டரிகள் அடிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்