Breaking News

6/recent/ticker-posts

தங்கத்தின் விலை உச்சம் பவுன் ரூ.50 ஆயிரமாக அதிகரிப்பு குடும்ப தலைவிகள் கவலை

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று அதன் விலை மேலும் உயர்ந்தது. ஒரு கிராம் ரூ.6250-க்கும், ஒரு பவுன் ரூ.50ஆயிரமாகவும் உச்சம் தொட்டது. இதனால் குடும்ப தலைவிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். தங்கத்தின் விலை குறையும் என்று நினைத்து திருமணம் உள்ளிட்ட விஷேச நிகழ்ச்சிகளுக்கு நகை எடுக்க காத்திருந்தவர்களின் பட்ஜெட் மேலும் எகிறி  உள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை உயர்வு விபரம் வருமாறு:-

21-ந் தேதி -ரூ.49,880

22-ந் தேதி -ரூ.49,600

23-ந் தேதி -ரூ49,480

24-ந் தேதி -ரூ.49,480

25-ந் தேதி -ரூ.49,640

26-ந் தேதி -ரூ.49,600

27-ந் தேதி -ரூ.49,720

28-ந் தேதி -ரூ.50,000

இதேபோல் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50 ஆகவும்,ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.80,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்