இன்று இரவு 8 மணியளவில் இந்த பப் கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து சரிந்தது. இதில் கட்டிடத்தின் முதல் தளத்தில் செயல்பட்ட மதுபான கூடம் இடிந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலியானதாக கூறப்படுகிறது.
மேலும் 5 பேருக்கு மேல் அதில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். கட்டிட இடிபாடுகளை ஜே.சி.பி எந்திரத்தின் உதவியுடன் அகற்றும் பணி வேகமாக நடந்து வருகிறது. உயிரிழந்தவர்கள் அனைவரும் மணிப்பூரை சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. அதன் தரை தளத்தில் யாரும் இல்லை என்று அங்கிருந்த காவலர்கள் தெரவித்து உள்ளனர்
விபத்து நடந்த இடம் அருகே நடைபெறும் மெட்ரோ ரெயில் கட்டுமான பணியின் அதிர்வு காரணமாக கட்டிடம் இடிந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 கருத்துகள்