பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனுக்கள் பரிசசீலனை இன்று நடைபெற்று முடிந்தது.30ந்தேதி மனுக்கள் வாபஸ்பெற கடைசிநாள் ஆகும். அன்றே இறுதி வேட்டபாளர் பட்டியல் வெளியிடப்படும்.
சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேட்பு மனுதாக்கல் செய்து உள்ளார். அவரது வேட்பு மனு ஏற்கப்பட்டு உள்ளது.
திருமாளவன் தாக்கல் செய்த வேட்பு மனுவில் சமர்பித்துள்ள பிரமாணப் பத்திரத்தில் அவரின் சொத்துக்கள் விவரங்களை தெரிவித்து உள்ளார்.அதன் விவரம் வருமாறு:-
திருமாவளவன் கையிருப்பில் ரொக்கமாக ரூ.10,000 உள்ளது. 4 வங்கிக் கணக்குகள் உள்ளன. இதில், அண்ணா சாலையில் உள்ள இந்தியன் வங்கி கிளை கணக்கில் ஜிரோ பேலன்ஸ் உள்ளது. அசோக் நகரில் உள்ள யூனியன் வங்கி கிளையில் ரூ.13,947,டெல்லியில் உள்ள ஸ்டேட் வங்கி கிளையில் ரூ.3,22,595 உள்ளது. அரியலூரில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் ரூ.10,00,000 உள்ளது. தேர்தல் செலவுக்காக இந்த தொகை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், எஸ்பிஐ மியூட்சுவல் பண்டில் ரூ.74,58,925 முதலீடு செய்து இருப்பதாகவும் வாகன கடன் ரூ.83,969, திருமாவளவனின் வேட்பு மனுவில் கூறப்பட்டுள்ளது. திருமாவளவனுக்கு சொந்தமாக தங்கம், வெள்ளி நகைகள் எதுவும் இல்லை. ரூ.32 லட்சம் மதிப்புள்ள போர்டு எண்டவர் கார் உள்பட மொத்தம் 5 வாகனங்கள் உள்ளன. சேமிப்பு திட்டத்தில் எச்.டி.எப்.சி. லைப் இன்சூரன்சு, எச்.டி.எப்.சி.பாலிசியில் மொத்தம் ரூ.32,22,436 இருப்பதாக திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.
0 கருத்துகள்