Breaking News

6/recent/ticker-posts

கட்டிடம் இடிந்து 3 பேர் பலி ஆழ்வார்பேட்டை மதுக்கூடம் இடிந்ததற்கு மெட்ரோ ரெயில் பணி காரணம் இல்லை மெட்ரோ ரெயில் நிர்வாகம் விளக்கம்

சென்னை ஆழ்வார்பேட்டையில் மெட்ரோ ரயில் பணி நடந்து வரும் பகுதியில் ஷேக் மேட் என்ற  மதுபான விடுதி செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் இன்று இரவு 8 மணியளவில் திடீரென இந்த மதுபான விடுதி கட்டிடத்தின்  மேல் பகுதி இடிந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் பலியானார்கள். மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்பதால் நள்ளிரவிலும்  தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று. அருகில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருவதால் அதன் அதிர்வு காரணமாக மதுபான கூடத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததாக தகவல் பரவியது . 

இந்தநிலையில் மெட்ரோ மெட்ரோ ரெயில் பணி காரணத்தினால் அதிர்வு ஏற்பட்டு இந்த விபத்து ஏற்படவில்லை என்று மெட்ரோ ரெயில் நிர்வாகத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.இதுதொடர்பாக  சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஆழ்வார்பேட்டை ஷேக் மேட்  கிள ப்பில் உள்ள மேல் தளம் இடிந்து விழுந்த சம்பவம் துரதிருஷ்ட வசமானது.இந்த சம்பவம் ஏற்பட்டதற்கு நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரெயில் பணி காரணம் அல்ல என்பதை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெளிவுபடுத்த விரும்புகிறது, ஏனெனில் மெட்ரோ ரெயில் பணி இடிந்த கட்டிடத்தில் இருந்து சுமார் 240 அடி தொலைவில் உள்ளது.  அந்த கட்டிடத்தில் அதிர்வுகள் காணப்படவில்லை.

மெட்ரோ ரெயில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணியில் தீயணைப்பு வீரர்களுக்கு மெட்ரோ ரெயில் நிர்வாகம் தேவையான உதவிகளை செய்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்