தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று அதன் விலை மேலும் உயர்ந்து உச்சம் தொட்டது. ஒரு பவுன் ரூ.50ஆயிரமாக உயர்ந்தது.
இதைத் தொடர்ந்து இன்று தங்கத்தின் விலை சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ 1120 அதிகரித்தது.இதனால் ஒரு கிராம் ரூ.6390-க்கும், ஒரு பவுன் ரூ.51,120-க்கும் விற்பனையானது.
இதே போல் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தால் ஏழைகளுக்கும் நடுத்தர குடும்பத்தினருக்கும் தங்கம் வாங்குவது எட்டாக்கனியாக மாறிவிடும்.
இதேபோல் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.ஒரு கிராம் வெள்ளி ரூ.80.80 ஆகவும்,ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.80,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
0 கருத்துகள்