Breaking News

6/recent/ticker-posts

உலகின் வயதான தாத்தாவின் உணவு ரகசியம் மீன், சிப்ஸ் பிடிக்குமாம்

ஜான் டினிஸ்வுட்

மனிதனின் சராரசி ஆயுட்காலம் 100 ஆண்டுகள் என்னு முந்தைய காலத்தில் இருந்தது. ஆனால் இப்போது இந்த சராசரி வயது 60 ஆக குறைந்து விட்டது என்பது தான் நிதர்சனமான உண்மை. சிறுவயதிலேயே மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களின் பிடியில் சிக்கி இந்த அவசர உலகில் வாழ்வதே ஒரு போராட்டமாக மாறி வருகிறது. இதற்கு பேஷன் என்ற பெயரில் மாறிய உணவு, வாழ்க்கை முறை மாற்றமே என்று அனைவரும் கூறினாலும் அதில் இருந்து மீளமுடியாமல் வாழ்க்கை சக்கரத்தில் சிக்கி இறுதி கட்டத்தை அடைந்து விடுகிறோம்.
இந்த நிலையில் உலகின் மிகவும் வயதான மனிதாராக இருந்த வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா தனது 114&வது வயதில் கடந்த 2&ந்தேதி மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து தற்போது உலகின் மிகவும் வயதான மனிதராக இங்கிலாந்தை சேர்ந்த  111 வயதான ஜான் டினிஸ்வுட் மாறி உள்ளார். அவருக்கு கின்னஸ் சாதனை பட்டம் வழங்கப்பட்டது.
நீண்டநாள் வாழ்வின் ரகசியம்,உணவு முறை  குறித்து அவர் கூறும்போது, எனது நீண்ட ஆயுட்காலம் “வெறும் அதிர்ஷ்டம்”.உணவில் சிறப்பு ரகசியமும் எதுவும் இல்லை.- எனக்கு பிடித்த உணவான மீன் மற்றும் சிப்ஸ்சை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சாப்பிடுவேன். நீண்டநாட்கள் வாழ்வது, குறைந்த காலம் வாழ்வது என்பது எதுவும் நம்மிடம் எதுவும் இல்லை. எதுவும் செய்யமுடியாது என்றார்.
ஜான் டின்னிஸ்வுட் கடந்த 1912-ம் ஆண்டு  வடக்கு இங்கிலாந்தின் மெர்சிசைடு பகுதியில்  பிறந்தார், இவர் ஓய்வுபெற்ற கணக்காளர் மற்றும் தபால் ஊழியர் ஆவார். 

                                                              ஜிரோமோன் கிமுரா

ஏற்கனவே 116 ஆண்டுகள் மற்றும் 54 நாட்கள் வாழ்ந்த ஜப்பானின் ஜிரோமோன் கிமுரா கடந்த 2013&ம்ஆண்டு ஜுன் 12-ந்தேதி மரணம் அடைந்தார். 

தற்போது உலக அளவில்  ஸ்பெயினை சேர்ந்த மரியா பிரான்யாஸ் மோரேரா என்பவர்தான் தற்போது வாழும் மிகவும் வயதான பெண் மற்றும் வயதானவர்.அவருக்கு வயது 117 ஆகும்.

மரியா பிரான்யாஸ் மோரேரா

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்