Breaking News

6/recent/ticker-posts

இந்திய அரசியலின் டாப் பினிஷர் ராகுல் காந்தி - ராஜ்நாத்சிங் பேச்சு


மத்திய பிரதேசம்,ஏப்.6-
மத்தியபிரதேச மாநிலம் சிங்ரௌலியில் நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் பேசியதாவது:-
நமது நாட்டின் எல்லைகள் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளன. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஏதாவது ஒரு மாநிலத்தில் பயங்கரவாதச் சம்பவங்கள் நிகழ்ந்து வந்தன. ஆனால் அவற்றை பா.ஜனதா அரசு கடுமையாகத் தடுத்து நிறுத்தி உள்ளது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மக்களை மிரட்டி அவர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்துகின்றனர். பா.ஜ.க. ஒருபோதும் சாதி, மத அடிப்படையில் பாகுபாடு காட்டாது.

 நாங்கள் உண்மையாகவும் மனிதநேயத்துடன் அரசியலில் ஈடுபட்டு வருகிறோம்.ஜனசங்கம் காலத்திலிருந்தே நமது தேர்தல் அறிக்கையைப் பார்த்தால், பா.ஜ.க. சொன்னதைச் செய்திருக்கிறது. ஒரே தேசம், ஒரே தேர்தல் குதிரை பேரத்தை நிறுத்துவதற்கான வழியாகும். எனவே, நாட்டில் ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ இருக்க வேண்டும்.“
காங்கிரசுக்கும் ஊழலுக்கும் பிரிக்க முடியாத பந்தம் இருக்கிறது.எங்கு காங்கிரஸ் வந்தாலும் ஊழலையும் பார்த்து இருப்பீர்கள். அதன் செல்வாக்கு சரிகிறது. கிரிக்கெட்டில் பிரபலமான பினிஷர் யார்? என்றால் எம்.எஸ்.தோனி. அப்படியென்றால், இந்திய அரசியலின் டாப் பினிஷர் யார் என்று யாராவது என்னிடம் கேட்டால் அது ராகுல் காந்தியாக இருக்கும் என்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.


இதற்கிடையே காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, இதுவரை பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரியிடம் மட்டும் தான் மிகவும் கீழ்தரமான பேச்சு இருந்தது.ஆனால், இப்போது பாதுகாப்பு அமைச்சரும் அதே மொழியைப் பயன்படுத்துகிறார். தேர்தலின் போது உண்மையான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப அவர்கள் நினைக்கிறார்கள். 

இவை அனைத்தும் திசை திருப்பும் யுக்திகள். சியாமா பிரசாத் முகர்ஜி ஜின்னாவின் முஸ்லீம் லீக்குடன் ஒப்பந்தம் செய்தார். காங்கிரஸ் ஒரு போதும் ஒப்பந்தம் செய்ததில்லை. அத்வானி&ஜஸ்வந்த் சிங், பாகிஸ்தான் சென்று ஜின்னாவை புகழ்ந்தார்கள். எந்த காங்கிரஸ் தலைவரும் அப்படி செய்யவில்லை என்று ஆவேசமாக கூறினார்.
 



கருத்துரையிடுக

0 கருத்துகள்