Breaking News

6/recent/ticker-posts

ஐ.பி.எல்.லில் அதிக டக் அவுட் பட்டியலில் முதல் இடத்தில் மேக்ஸ்வெல் இணைந்தார்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று மும்பை-பெங்களூர் அணிகள் மோதின. டாஸ்வென்ற மும்பை அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.வீராட்கோலி 3 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். இதன் பின்னர் டூப்ளிசஸ் 61 ரன்கள், பதிட்கர் 50 ரன்கள், தினேஷ்கார்த்திக் 53 ரன்கள் விளாசினர். 

இதனால் 20ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. பும்ரா அபாரமாக பந்துவீசி 5 விக்கெட் வீழ்த்தினார். பெங்களூர் அணிவீரர்களில் மேக்ஸ்வெல், லோம்ரோர், விஜயகுமார் வைசாக் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்கள். மேக்ஸ்வெல் ஸ்ரேயாஸ் கோபால் பந்தில் எல்.பி.டவுள்.யூ. முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

 இந்த போட்டியில் மேக்ஸ்வெல் டக் அவுட் ஆனது மூலம் ஐ.பி.எல்.கிரிக்கெட்டில் அதிக முறை ரன் எதுவும் எடுக்காமல் 17 முறை அவுட்டானவர்களின் முதல் இடத்தில் உள்ள பட்டியலில் சேர்ந்து உள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் ஏற்கனவே  தினேஷ்கார்த்திக், ரோகித்சர்மா 17 முறை டக் அவுட் ஆகி உள்ளனர்.

 இதற்கு அடுத்த 2-வது இடத்தில் 15 முறை டக்அவுட் ஆகி ரஷித்கான், பியூஸ் சாவ்லா, சுனில் நரைன், மன்தீப்சிங், உள்ளனர். 3-வது இடத்தில் 14 முறை டக்அவுட் ஆகி மனிஷ் பாண்டே, அம்பதி ராயுடு இடம் பிடித்து இருக்கிறார்கள். 

மோசமான சாதனையில் முதல் இடத்தில் இடம் பிடித்து உள்ள மேக்ஸ்வெல், ரோகித்சர்மா, தினேஷ்கார்த்திக் ஆகியோர் இந்த ஐ.பி.எல்.தொடர் முழுவதும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்