ஐ.பி.எல்.கிரிக்கெட்டில் ராஜஸ்தான்- பெங்களூர் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. வீராட் கோலி 72 பந்துகளில் 113 ரன்கள் எடுத்தார் டூப்ளிசஸ் 44 ரன்கள் எடுத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் அணியில் ஆரம்பத்தில் ஜெய்ஸ்வால் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்.
இதன் பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் சஞ்சுசாம்சன்-பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் சிக்ஸர், பவுண்டரிகளாக பறந்தன.
சஞ்சுசாம்சன் தனது பங்கிற்கு 42 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஆட்டத்தின் இறுதி கட்டத்தில்ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு ஒரு ரன் மட்டுமே இருந்தபோது பட்லர் சதம் அடிக்க 6 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது.
இதனால் அவர் சதம் அடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. எதிர்பார்த்தபடி பட்லர் சிக்சர் அடித்து தனது சதத்தை எடுத்தார். மேலும் ராஜஸ்தான் அணி 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு189 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பட்லர் 100 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
இன்று நடைபெற்ற போட்டியில் நடப்பு ஐ.பி.எல் தொடரின் முதல் 2 சதங்களும் ஒரே போட்டியில் அடிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடப்பட்டது.
0 கருத்துகள்