Breaking News

6/recent/ticker-posts

நெல்லை ரெயிலில் ரூ.4 கோடியுடன் சிக்கிய பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலைமுன்னிட்டு பறக்கும் படையினர் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு சென்னையில் இருந்து நெல்லை நோக்கி சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் நின்றபோது  ஏ.சி. பெட்டியில் பயணம் செய்த பயணிகளிடம் தேர்தல் பறக்கும் படையினர்  சோதனை செய்தனர். அப்போது அந்த பெட்டியில் பயணம் செய்த 3 நபர்களிடம் பெரிய அளவில் 6 பைகள் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த பறக்கும் படையில் அதனை  சோதனை செய்தபோது கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன.

இதையடுத்து பயணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த 3 பேரையும் ரெயிலில் இருந்து இறக்கி விசாரித்தனர். விசாரணையில் ஒருவர் சென்னை திருவல்லிக்கேனியில் உள்ளஓட்டலில் மேலாளராக உள்ள பா.ஜனதா பிரமுகர் சதீஷ், அவரது சகோதரர் நவீன், ஓட்டலுக்கு காய்கறி ஏற்றி வரும் வாகனத்தின் டிரைவர் பெருமாள் என்பது தெரியவந்தது.

அவர்களிடம் கைப்பற்றப்பட்ட பணத்தை போலீசார் எந்திரம் மூலம் விடிய, விடிய எண்ணினர். மொதம் ரூ.4 கோடி ரொக்கம் இருந்தது. அதிகாலை 5.30 மணிக்கு பணத்தை பெட்டியில் வைத்து சீல் வைத்து அரசு கருவூலத்தில் தாசில்தார் நடராஜன் ஒப்படைத்தார். ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து வருமான வரித்துறையினருக்கும் தேர்தல் பறக்கும் படையினர் தகவல் தெரிவித்து உள்ளனர்.

பிடிபட்டவர்களில் ஒருவர் நெல்லை பா.ஜ.க.வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினர் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து திருவல்லிக்கேனி, புரசைவாக்கத்தில் உள்ள ஓட்டல்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். 

வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி கைதான பா.ஜனதா பிரமுகர் சதீஷ் உள்ளிட்ட 3 பேரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் விருகம்பாக்கத்தில் உள்ள  நயினார் நாகேந்திரனின் உறவினர் ஒருவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது. ரூ.4 கோடி பிடிபட்டது தொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு தேர்தல் கமிஷனர் சத்யபிரதாசாகு தெரிவித்து உள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்