இந்தநிலையில் கடந்த 12-ந்தேதி இரவு 11 மணியளவில் தெற்கு வான்கூவரில் உள்ள 55-வது அவன்யூ பகுதியில் காரில் இருந்து திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது காருக்குள் சிராக் அன்டில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டு கிடந்தார். அவரது கொலைக்கான காரணம் என்ன என்று இதுவரை தெரியவில்லை. இந்த கொலை தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை,விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக அரியானாவில் உள்ள சிராக் ஆண்டிலின் சகோதரர் ரோமித் அன்டல் நிருபர்களிடம் கூறும்போது, நானும் எனது அண்ணனும் தினமும் பேசுவோம். சம்பவம் நடந்த நாள் அன்று அதற்கு முன்பு நான் அவருடன் கடைசியாக பேசினேன். அவர் மகிழ்ச்சியாக இருந்தார், அவருக்கு யாருடனும் எந்த பிரச்சனையும் மோதலும் இல்லை. மிகவும் கண்ணியமானவர்.அவர் வெளியே செல்வதற்காக தனது ஆடி காரில் சென்றபோதுதான் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார் என்றர்.
0 கருத்துகள்