Breaking News

6/recent/ticker-posts

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பட்லரின் அதிரடி சதத்தால் ராஜஸ்தான் வெற்றி

 

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று ராஜஸ்தான்-கொல்கத்தா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் சுனில் நரைன் அதிரடியாக விளையாடினார். அவர் 56 பந்துகளில் 109 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

 சால்ட், ரகுவன்ஷி, ஸ்ரேயர்ஸ் ஐயர், ரசல்,வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் எதிர்பார்த்த அளவு ரன்கள் குவிக்கவில்லை.

 எனினும் கடைசி கட்டத்தில் ரிங்கு சிங் 9 பந்தில் 20 ரன்கள் அடித்தார்‌. முடிவில் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு  223 ரன்கள் குவித்தது. ஆவேஷ்கான், குல்தீப் சென் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

பின்னர் 224 ரன்கள் எடுத்தால் வெற்றி எந்த இலக்குடன் ராஜஸ்தான் அணி களம் இறங்கியது.பட்லர் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள் .ரியான் பராக் 17 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

ஆனால் பட்லர் மட்டும் மறுமுனையில் அவுட் ஆகாமல் நிலைத்து நின்று அதிரடி காட்டினார்.  ஒரு கட்டத்தில் ராஜஸ்தானின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தபோது களம் இறங்கிய பவுல் 13 பந்துகளில் 26 ரன்கள் மிரட்டினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியது. கடைசி இரண்டு ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. ‌ஹர்ஷித் ரானா வீசிய 19-வது ஓவரில் பட்லர் 19 ரன்கள் குவித்தார் .இதனால் கடைசி ஓவரில் 9  ரன்கள் எடுத்தால் வெற்றி இந்த எளிதான இலக்கு வந்தது.

கடைசி ஓவரை வருண்சக்கரவர்த்தி வீசினார். முதல் பந்தில் பட்லர் சிக்ஸர் அடித்தார். பின்னர் தொடர்ந்து மூன்று பந்துகளில் ரன் எதுவும் எடுக்கவில்லை. இதனால் ஆட்டத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் 5-வது பந்தில் 2ரன்னும், கடைசி பந்தில் ஒரு ரன்னும் எடுத்து ராஜஸ்தான் திரில் வெற்றி பெற்றது. பட்லர் 60 பந்துகளில் 107 ரன்கள் குவித்தார். இது பட்லரின் இந்த ஐபிஎல் சீசனில் இரண்டாவது சதம் ஆகும்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணி பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் 224 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து வெற்றி பெற்றது சாதனையாக இருந்தது. தற்போது அதே இலக்கை ராஜஸ்தான் அணி கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் எடுத்து வெற்றி பெற்று மீண்டும் சாதனை படைத்துள்ளது. இது ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன் சேஸ் ஆகும்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்