சத்ததீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ளது. பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்டுகளை வேட்டையாடி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று மாலை காங்கேர் மாவட்டம் பினகுண்டா கிராமத்திற்கு அருகில் உள்ள காடுகளில் மாவோயிஸ்டுகள் கும்பலாக பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல்கிடைத்தது. இதையடுத்து மாவட்ட அதிரடிப்படையினர் மற்றும் எல்லைப்பாதுகாப்பு படையினர் கூட்டாக அந்த காட்டை சுற்றி வளைத்து புகுந்தனர். அப்போது மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு வீரர்களுக்கும் இடையே பங்கர துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. பலமணி நேரம் நீடித்த இந்த மோதலில் மொத்தம் 29 மாவோயிஸ்டுகள் அதிரடியாக சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதில் மாவோயிஸ்டு தலைவர்களின் ஒருவனான சங்கர் ராவ் என்பவனும் இறந்தான். பாதுகாப்பு வீரர்களிடம் தொடர்ந்து ஆட்டம் காட்டி வந்த சங்கர் ராவ் தலைக்கு ரூ.25 லட்சம் பரிசு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது நடந்த என்கவுண்டரில் சங்கர்ராவ் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார். இந்த மோதலில் பாதுகாப்பு வீரர்களில் 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது அவர்கள் நலமுடன் இருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளிடம் இரந்து ஏராளமான ஏகே.47 ரக துப்பாக்கிகள்,மற்றும் நவீனரக துப்பாக்கிகள், கைஎறிகுண்டுகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. பாதுகாப்பு வீரர்களின் என்கவுண்டரில் 29 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதை எஸ்பி கல்யாண் அலிசெலா உறுதிப்படுத்தி உள்ளார். மேலும், நக்சலைட் தளபதி சங்கர் ராவும் கொல்லப்பட்டது உறுதி ஆகி உள்ளது.
0 கருத்துகள்