Breaking News

6/recent/ticker-posts

தி.மு.க.வுடன் கை கோர்த்தது தியாகம் அல்ல... வியூகம் கமல்ஹாசன் பேச்சு

கூட்டத்தில் கமல்ஹாசன் பேசிய காட்சி.

சென்னை, மார்ச்24-

தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. திமுக, அதிமுக ,பாரதிய ஜனதா, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.

இதில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடவில்லை. திமுக கூட்டணிக்கு கமல் ஆதரவு தெரிவித்து உள்ளார். மேலும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதாகவும் அறிவித்து இருக்கிறார்.

இது பல்வேறு தரப்பினர் மத்தியில் பேசும் பொருளாக மாறியது. நடிகர் கமல்ஹாசன் கட்சி தேர்தலில் போட்டியிடாதது ஏன்? என்று பல்வேறு வகையில் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சார வழிகாட்டுதல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

திமுகவுடன் கை கோர்த்தது தியாகம் என்கின்றனர், உண்மையில் அது வியூகம்.டி.வி. யை நோக்கி எறியப்பட்ட ரிமோட் இன்னும் கையில் தான் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கிடையே பாராளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் வருகிற 29ஆம் தேதி முதல் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் .அவரது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விபரம்:-




கருத்துரையிடுக

0 கருத்துகள்