Breaking News

6/recent/ticker-posts

விடுதலை சிறுத்தைகள் கட்சி தெலுங்கானா, கேரளா, கர்நாடகா,மராட்டிய மாநிலத்திலும் போட்டி திருமாவளவன் அறிவிப்பு

சென்னை,மார்ச்.24-

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சிதம்பரம் தொகுதியில் மீண்டும் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் போட்டியிடுகிறார்கள்.

இந்த நிலையில்  விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகத்தை தாண்டி தெலுங்கானா, கேரளா, கர்நாடகா,மராட்டியம் ஆகிய மாநிலங்களிலும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-

 பாராளுமன்றத் தேர்தலில் தெலுங்கானாவில் 10 தொகுதிகளிலும், கேரளாவில் 5 தொகுதிகளிலும், கர்நாடகாவில் 6 தொகுதிகளிலும், மகாராஷ்டிராவில் ஒரு தொகுதியிலும் போட்டியிட உள்ளோம்.  இந்த வேட்பாளர்கள் அனைவரும் பானை சின்னத்தில் போட்டி இடுவார்கள்.

ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.  தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஒய்.எஸ்.ஆர்.சர்மிளாவுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். பிற மாநிலங்களில் அப்படி சூழ்நிலை ஏற்படவில்லை.

எனவே  அந்தந்த மாநிலங்களில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளோம். மேலும், தனித்தனியாக தேர்தல் அறிக்கைகள் அந்தந்த மாநிலங்களுக்கு வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்