விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று (29-ந்தேதி) காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் பலியானார்கள்.
வெடிவிபத்து
சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியல் சகாதேவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பட்டாசு ஆலையில் 10-க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் பட்டாசு ஆலையில் உற்பத்தி தொடங்கியது. 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு வந்து வழக்கமான வேலைகளில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 3 அறைகளில் இருந்த பட்டாசுகள்வெடித்து சிதறின. இந்த விபத்தில் 3 அறைகள் முற்றிலம் இடிந்து தரைமட்டமானது. மேலும் அங்கு பணியில் இருந்த 4 தொழிலாளர்கள் பலியானார்கள்.
மூலப் பொருள் உராய்வு
பட்டாசு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை கலவை செய்தபோது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. வெடிவிபத்து ஏற்பட்ட அறைகளில் வேலைபார்த்த மேலும் சில தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
தகவல் அறிந்ததும் சாத்தூர் தாலுகா போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டுடனர். பட்டாசு விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்:
கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்ற சூர்யாவின் மகன் தேவ்
0 கருத்துகள்