Breaking News

6/recent/ticker-posts

அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நடிகர் திடீர் மரணம்

 

நடிகரும், அ.தி.மு.க.வின் நட்சத்திரப் பேச்சாளருமாக இருந்தவர் அருள்மணி(65). சென்னையில் நேற்றிரவு (வியாழக்கிழமை)மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். 

இவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். அருள்மணி தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் 90-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

 தங்கர் பச்சானின் 'அழகி' திரைப்படம் அருள்மணியின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.  அவர் தென்றல், பொன்னுமணி, தர்மசீலன், கருப்பு ரோஜா, வேல், மருதமலை, கற்றது தமிழ், வன யுத்தம், சிங்கம் 2, தாண்டவகோனே, லிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அருள்மணி அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக கடந்த 10 நாட்களாக தேர்தல் பிரச்சாரம் செய்துவந்தார். நேற்று மாலை சென்னை திரும்பிய நிலையில் அவர்  மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அருள்மணி தொடர்ந்து பல டி.வி.தொடர்களிலும் நடித்திருந்தார் இவரது திடீர் மறைவு  சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்