Breaking News

6/recent/ticker-posts

தங்கர் பச்சானுக்கு கிளிஜோசியம் பார்த்தவர் கைது



கடலூர் பாராளுமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக பிரபல சினிமா டைரக்டரும் நடிகருமான தங்கர்பச்சான் போட்டியிடுகிறார். அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தென்னம்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது அங்கு நின்ற கிளிஜோசியர் ஒருவருடம் தனக்கு ஜோதிடம் பார்க்கும் படி கூறினார். அப்போது கிளி எடுத்து கொடுத்த சீட்டை காண்பித்த ஜோசியர் கண்டிப்பாக வெற்றிபெறுவீர்கள்  என்று கூறினார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.
இந்த நிலையில் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவரை திடீரென வனத்துறையினர் கைது செய்து உள்ளனர். 

வனவிலங்கு பாதுகாப்பு திருத்தசசட்டத்தின் கீழ், கிளிகளை வளர்ப்பது குற்றம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக  வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 4 கிளிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. கிளிகளை வைத்து வாழ்க்கை நடத்தி வந்த அப்பாவி ஜோசியரை கைது செய்து கடமையை செய்த வனத்துறையினருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
வனத்துறையினரின் நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:---&
கடலூர் தொகுதியில் தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் எனக் கூறிய கிளி ஜோதிடர் கைது செய்யப்பட்டு உள்ளார். காடுகளில் லட்சக்கணக்கான மரங்களும், ஆயிரக்கணக்கான விலங்குகளும் அழிக்கப்படுகின்றன.
அவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசு, ஓர் ஏழை கிளி ஜோதிடரை கைது செய்து அதன் வீரத்தைக் காட்டியிருக்கிறது. அந்த ஜோதிடரின் பிழைப்பில் மண்ணைப் போட்டிருக்கிறது. இதற்குக் காரணமானவர்களுக்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அன்புமணி கூறிஉள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்