Breaking News

6/recent/ticker-posts

ஆவடி அருகே பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகை கடையில் ரூ.1.5 கோடி நகைகள் கொள்ளை உரிமையாளரை கட்டிப்போட்டு துணிகரம்



ஆவடியை அடுத்த முத்தாப்புதுப்பேட்டையை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் கிருஷ்ணா ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் அதே பகுதியில் நகைக்கடை மற்றும் அடகு கடை வைத்து உள்ளார்.
இன்று (15&ந்தேதி) மதியம் 12.30 மணியளவில் கடையில் பிரகாஷ் மட்டும் தனியாக இருந்தார்.அப்போது காரில் வந்த  4 பேர் கும்பல் திடீரென கடைக்குள் புகுந்தனர்.
அவர்கள் துப்பாக்கியை காட்டி பிரகாசை மிரட்டினர். மேலும் அவரது கை, கால்களை கட்டிப்போட்டனர். பின்னர் கடையில் இருந்த சுமார் ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்க நகை மற்றும் பணத்தை அள்ளி கொள்ளையடித்து காரில் தப்பி சென்று விட்டனர்.
சிறிது நேரத்தில் பிரகாசின் அலறல் சத்தம்கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டனர். நகைகடையில் நடந்த கொள்ளை குறித்து பிரகாஷ் போலீசில் புகார் செய்தார். கொள்ளையர்களின் உருவம் அங்குள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது. அதனை வைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடிவருகிறார்கள். 5 தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாகன சோதனை அனைத்து இடங்களிலும் தீவிரமாக நடந்து வரும் நிலையில் கொள்ளைகும்பல் நீண்ட தூரம் தப்பி சென்று இருக்க வாய்ப்பு இல்லை என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே கொள்ளையர்கள் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட பகுதியில் பதுங்கி இருக்கலாம் என்ற கோணத்தில் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். மதியம் நேரத்தில் ஆட்கள் இல்லாததை நோட்ட மிட்டு மர்ம கும்பல் கைவரிரைச காட்டி உள்ளனர். அவர்கள் பல நாட்கள் நகை கடையை நோட்ட மிட்டு இருக்காலம் என்பதால் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் கடந்த ஒருவாரத்தில் பதிவான பழையகாட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
பட்டப்பகலில் கொள்ளையர்கள் எந்த வித பதட்டமும்இல்லாமல் நகைக்கடைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருவதை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்