ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத்- மும்பை அணிகள் இன்று மோதின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் 45 ரன்கள் எடுத்தார் .
இதன் பின்னர் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இஷான்கிஷன் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார் .
தொடர்ந்து விளையாடிய ரோகித் சர்மா 43ரன்கள்,ப்ரீவிஸ் 46 ரன்கள் எடுத்தனர் . அவர்களை தவிர யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது .அதிரடி வீரர் ஹர்திக் பாண்டியா முதல் பந்தில் சிக்ஸர்,அடுத்த பந்தில் பவுண்டரி விளாசினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 3வது பந்தில் ஹர்திக் பாண்டியா கேட்ச் ஆகி அவுட் ஆனார்.இதனால் மும்பை அணியின் வெற்றி கனவு தகர்ந்தது.
இதை தொடர்ந்து மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் மட்டும் எடுத்தது. இதையடுத்து குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்று நடைபெற்ற முதல் போட்டியிலும் மும்பை அணி தோல்வி அடைந்ததால் ஐபிஎல் கிரிக்கெட்டில் 12-வது முறையாக தனது முதல் போட்டியில் மும்பை அணி தோல்வியை தழுவி இருக்கும் மோசமான சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்