நொய்டா, மார்ச் 20-
சாலையோரத்தில் நோ பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்தினால் அதனை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்வது வழக்கம். ஆட்கள் இல்லாத கார்களை சிறிய கிரேன் இழுவை வாகனத்தின் உதவியுடன் இழுத்து செல்வார்கள். ஆனால் உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டா, 50-வதுசெக்டார் பகுதியில் சாலையோர்தில் நிறுத்தப்பட்டு இருந்த காருக்குள் 2 வயதானர்கள் இருந்தபோதே நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டதாக கூறி அதனை ஒப்பந்த ஊழியர்கள் இழுவை வாகனத்தின் உதவியுடன் இழுத்து சென்றனர்.
அப்போது காருக்குள் இருந்த 2 வயதானவர்களும் என்ன செய்வது என்று ெதரியாமல் தவித்தனர். விதிமுறைகளின்படி, நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்படும் வாகனத்திற்குள் நபர்கள் இருந்தால் அந்த காரை இழுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த காட்சியை அவ்வழியே சென்ற ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இது நொய்டா பகுதி பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த வீடியோ வைரலானதால் நொய்டா போலீசார் விசாரணை நடத்தி காரை இழுத்து சென்ற வாகனத்தை பறிமுதல் செய்தனர் .மேலும் அதை இயக்கியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
0 கருத்துகள்