Breaking News

6/recent/ticker-posts

அமலாக்கத்துறை கைதை எதிர்த்து கெஜ்ரிவால் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் நாளை அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது

டெல்லியில் மதுபான கொள்கையில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி  சிபிஐ, அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங், தெலங்கானா முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகரராவ் மகள் கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே இந்த வழக்கில் நேற்று முன்தினம் இரவு டெல்லி முதல்அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று கோர்ட்டில் அதிகப்படுத்தப்பட்ட அவரை மார்ச் 28ம் தேதி வரை  7 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.

இதற்கிடையே அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டு இருப்பதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கு அவசர வழக்காக நாளை விசாரணைக்கு வருகிறது. ஏற்கனவே அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு பின்னர் அந்த மனு வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் சட்டநிபுணர்கள் குழு கூறும்போது, அரவிந்த் கெஜ்ரிவால் கைது மற்றும் அவர்  காவலில் வைக்கப்படுவது சட்டவிரோதமானது. எனவே, கெஜ்ரிவாலை உடனடியாக விடுவிக்க உரிமை உண்டு என்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்