Breaking News

6/recent/ticker-posts

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க.-அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

 சென்னை,மார்ச்.20-

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ந்தேதி நடக்கிறது. இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சியினர் தங்களது கூட்டணியை இறுதி செய்து வேட்பாளர்களை அறிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க,-அ.தி.மு. வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது.

தி.மு.க. சார்பில் போட்டியிடும் 21 பேரின் பெயர்பட்டியலும், அ.தி.மு.க.சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் முதல்கட்டமாக 16 பேர் பட்டியலும் வெளியிடப்பட்டது.



தி.மு.க.வேட்பாளர்கள் விபரம் வருமாறு:-

வட சென்னை - கலாநிதி வீராசாமி,தென் சென்னை - சுமதி என்கிற தமிழச்சி தங்க பாண்டியன், மத்திய செனனை - தயாநிதி மாறன், ஸ்ரீபெரும்பதூர் -டி ஆர்பாலு,காஞ்சிபுரம் (தனி) - ஜி செல்வம்,அரக்கோணம் - எஸ்.ஜெகத்ரட்சகன், வேலூர் - கதிர் ஆனந்த், தர்மபுரி - ஆ மணி, திருவண்ணாமலை - சிஎன் அண்ணாதுரை, ஆரணி - எம்.ஸ்.தரணிவேந்தன், கள்ளக்குறிச்சி - மலையரசன், சேலம் - செல்வகணபதி, ஈரோடு - கே ஏ பிரகாஷ், நீலகிரி(தனி) - ஆ.ராசா, கோவை - கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி - ஈஸ்வரசாமி,பெரம்பலூர் - அருண் நேரு, தஞ்சாவூர் - முரசொலி, தேனி - தங்க தமிழ்செல்வன், தென்காசி (தனி) - ராணிஸ்ரீகுமார், தூத்துக்குடி - கனிமொழி.

அ.தி.மு.க.வேட்பாளர்கள் விபரம் வருமாறு:-



1 ) வட சென்னை - ராயபுரம் ஆர்.மனோ, 2 ) தென் சென்னை - டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன், 3 ) காஞ்சிபுரம் - ராஜசேகர், 4 ) அரக்கோணம் - ஏ.என்.விஜயன், 5 ) கிருஷ்ணகிரி - ஜெயபிரகாஷ்,6 ) ஆரணி - கஜேந்திரன் 7 ) விழுப்புரம் - பாக்யராஜ் 8 ) சேலம்- விக்னேஷ் 9 ) நாமக்கல் - தமிழ்மணி 10 ) ஈரோடு - ஆற்றல் அசோக்குமார் 11) நாகை - சுர்ஜித் சங்கர் 12) மதுரை - சரவணன் 13) தேனி - வி.டி.நாராயண சாமி,14) கரூர் - கே.ஆர்.என்.தங்கவேல் 15) ராமநாதபுரம் - ஜெயபெருமாள் 16) சிதம்பரம் - சந்திரஹாசன்.

மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதியும்,எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்