Breaking News

6/recent/ticker-posts

பா.ஜ.க.கூட்டணியில் அ.ம.மு.க.-ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு தொகுதிபங்கீடு

 சென்னை, மார்ச் 19-

பாராளுமன்றத் தேர்தல் திருவிழா களைகட்ட தொடங்கிவிட்டது. மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாளை முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இதையடுத்து அரசியல் கட்சியினர் தங்களது கூட்டணியை முடிவு செய்து வருகிறார்கள். 


தி.மு.க.வில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டன. பாரதிய ஜனதா கூட்டணியில் பெரும்பாலான கட்சிகள் ஐக்கியம் ஆகி உள்ளன. ஆனால் அ.தி.மு.க.வில் இன்னும் குழப்பமான நிலை நீடித்து வருகிறது. இந்த கட்சியின் கூட்டணி இன்னும் முழுமையாக முடிவாகவில்லை .இதே போல் தே.மு.தி.க. கட்சி நிலையும் எங்கு செல்வது என்று தெரியாமல் திக்கு முக்காடியபடி காணப்படுகிறது. இன்று அல்லது நாளைக்குள் அனைத்துக் கட்சிகளின் கூட்டணிகளும் முடிவாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை பாரதிய ஜனதா கூட்டணி கட்சியினர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து தமிழகத்திற்கு வந்து பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.தமிழகத்தில் முதலாவதாக  தேர்தல் பிரச்சாரத்தை பா.ஜனதா தொடங்கி விட்டது. ஆனால் மாநிலத்தில் தி.மு.க. அ.தி.மு.க .உள்ளிட்ட ஆகிய இரண்டு பெரிய கட்சிகளும் இன்னும் பிரச்சாரத்தை தொடங்கவில்லை. தேர்தல் திருவிழா ரேசில் தற்போதைய நிலவரப்படி பா. ஜனதா முதலிடத்தில் உள்ளது .

அந்த கட்சியின் கூட்டணி கட்சிகள் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் தேர்தல் சூடு பிடிக்கும்.

இந்த நிலையில் சேலத்தில் நடைபெற்ற பிரதமர் மோடி கலந்து கொண்ட கூட்டத்தில் டிடிவி தினகரன் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டனர் அவர்களுக்கு பாரதியா ஜனதா கூட்டணியில் இடம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

ஓபிஎஸ் ஏற்கனவே இரட்டை இலை தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.ஆனால் அதில் அவருக்கு சாதகமான முடிவு கிடைக்கவில்லை.

 இதையடுத்து அவர் தனி சின்னத்தில் போட்டியிடுவாரா அல்லது பாரதிய ஜனதாவின் தாமரை சின்னத்தில் நிற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது . இல்லையெனில் அ.ம.மு.க. கட்சி சார்பில் போட்டியிடவும் வாய்ப்பு உள்ளது.

 இதையடுத்து பா.ஜ.க.கூட்டணியில் இடம்பெற்றுள்ள அ.ம.மு.க.மற்றும் ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு தொகுதிபங்கீடு ஒப்பந்தம் நாளை காலை கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்