Breaking News

6/recent/ticker-posts

பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் தமிழகத்தில் ஏப்.19-ந்தேதி மக்களவை தேர்தல்- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

 


புதுடெல்லி.மார்ச்.16-

பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளன. இதில் முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டுக்கு  தேர்தல் நடைபெறுகிறது. ஏப்.19-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறத..இதனோடு  விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.


முதல் கட்டமாக, தமிழகம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது.

முதல்கட்ட வாக்குபதிவுக்கு மார்ச் 20-ம் தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்படுகின்றன. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27-ம் தேதி. மார்ச் 28-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனு வாபஸ் பெற மார்ச் 30-ம் தேதி கடைசி நாள் ஆகும். இதனை தொடர்ந்து ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

2-ம் கட்டமாக நடைபெறும் தேர்தல்கள் ஏப்.26-ம் தேதி நடைபெறும் எனவும், 3-ம் கட்ட தேர்தல் மே 7-ம் தேதியும், 4-ம் கட்ட தேர்தல் மே-13-ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே-25-ம் தேதியும், 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியும் நடைபெற உள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்